ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பிரான்ஸில் சம்பள உயர்வு

பிரான்ஸில் பல வாரங்களாக நீடிக்கும் ஆர்ப்பாட்டங்களை அடுத்து அடிப்படை சம்பள அதிகரிப்பு மற்றும் வரிச்சலுகைகள் குறித்த அறிவிப்பை அந்நாட்டு ஜனாதிபதி எமானுவேல் மெக்ரோன் வெளியிட்டுள்ளார்.

பிரான்ஸில் எரிபொருள் விலை அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவு மற்றும் ஏனைய விடயங்களுக்காக கடந்த நான்கு வாரங்களாக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையிலை கடந்த திங்கட்கிழமை தொலைக்காட்சியில் உரையாற்றிய மெக்ரோன் வன்முறைகளை கண்டித்ததோடு ஆர்ப்பாட்டக்காரர்களின் கோபம் “ஆழமானது மற்றும் பல வழிகளிலும் நியாயமானது” என்று குறிப்பிட்டார்.

2019 ஆம் ஆண்டிலிருந்து அடிப்படை மாதச் சம்பளம் 100 யூரோவா அதிகரிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த வருவாய் ஓய்வூதியக்காரர்களுக்கு உயர்த்தப்படவிருந்த வரி ரத்துச் செய்யப்பட்டு, மேலதிக நேரக் கொடுப்பனவுக்கான வரி இல்லாமல் செய்யப்பட்டு, ஊழியர்களுக்கான ஆண்டுக் கொடுப்பனவு வரி இன்றி வழங்கப்படும் என்றும் மெக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.

Wed, 12/12/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை