உலகில் மிக வேகமாக நகரும் டிரகுலா எறும்பு

உலகில் மிக வேகமாக நகரும் பிராணியாக எறும்பு இனம் ஒன்று சாதனை படைத்துள்ளது. அவுஸ்திரேலியாவில் உள்ள டிரகுலா எறும்பு தனது தாடையை மணிக்கு 200 மைல் வேகத்தில் நகர்த்துவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கண் இமைப்பதை விடவும் 5000 மடங்கு வேகமானதாகும்.

இதன்மூலம் ஒருசில மில்லிமீற்றர் அளவு கொண்ட இந்த எறும்பு, மணிக்கு 60 மைல்கள் வேகத்தில் ஓடும் சிறுத்தைப்புலியை பின்தள்ளியே அதிவேகமான பிராணியாக முதலிடத்தை பிடித்துள்ளது.

ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இருக்கும் டிரகுலா எறும்பு தனது தாடைகளை கவண் போன்று பயன்படுத்தி, பறக்கின்றன. இரை பெறுவதற்கு மற்றும் எதிரி எறும்புகளுடன் சண்டையிடவும் அதன் தாடைகள் பயன்படுகின்றன.

வேகமான நகர்வை அளவிடும் வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் அமெரிக்க விஞ்ஞானிகளால் இந்த எறும்பினத்தின் வேகமான நகர்வு கணிக்கப்பட்டுள்ளது.

Thu, 12/13/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை