இஸ்ரேல் பிரதமர் மகனின் பேஸ்புக் பக்கம் முடக்கம்

முஸ்லிம்களுக்கு எதிராக கருத்து பதிவிட்டதற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மகனின் பக்கத்தை 24 மணி நேரத்திற்கு பேஸ்புக் முடக்கியது.

பெஞ்சமின் நெதன்யாகுவின் மகன்களில் ஒருவரான யாயிர் நேதன்யாகு, தனது பேஸ்புக் பக்கத்தில் சில கருத்துகளை பதிவிட்டிருந்தார்.

அதில், ஜப்பானிலும், ஐஸ்லாந்திலும் தாக்குதல்கள் எதுவும் நடைபெறாததற்கு காரணம், அங்கெல்லாம் முஸ்லிம்கள் இல்லை என்பதால் தான் என்று கூறப்பட்டு இருந்தது.

இஸ்ரேலில் இருந்து முஸ்லிம்கள்் அனைவரும் வெளியேறினால் அமைதி கிடைக்கும் என்றும் யாயிர் குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்துக்கு எதிர்ப்பு எழவே அவரது பக்கத்தை 24 மணி நேரத்திற்கு பேஸ்புக் முடக்கியது. இதைக் கண்டித்துள்ள யாயிர், சர்வாதிகார சிந்தனையுடன் பேஸ்புக் இருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.இஸ்ரேல் பிரதமரின் எதிர்ப்பாளர்கள் யாயிரை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். உத்தியோகபூர் பதவிகள் எதுவும் இன்றி பிரதமர் இல்லாத்தில் அங்குள்ள மெய்க்காவலர்கள், ஓட்டுநர்கள் மற்றும் ஏனைய வசதிகளுடன் வாழ்பவராக அவர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.

எனினும் 27 வயதான அவர் நெதன்யாகுவின் எதிர்கால அரசியல் வாரிசாக பரவலாக பார்க்கப்பட்டு வருகிறார்.

Tue, 12/18/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை