கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் ரொஜர்ஸ் அணி வெற்றி

கொழும்பு கிரிக்கெட் ரொஜர்ஸ் அணிக்கும் ஆனந்த கிரிக்கெட் கழக அணிக்குமிடையே கெம்பல் பார்க் மைதானத்தில் நடைபெற்ற கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில் கொழும்பு ரொஜர்ஸ் அணி 10 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஆனந்த கிரிக்கெட் கழக அணி 32.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்களைப் பெற்றது. மொஹம்மட் மப்ராஸ் 30 ஓட்டங்களையும் பி. ஹசன் 29 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் பசன் பெரேரா, 11 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகனையும் கசுன் பெரேரா 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பதிலளித்து ஆடிய கொழும்பு ரொஜர்ஸ் அணி 17.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 117 ஓட்டங்களைப் பெற்றது. எஸ். செல்வகுமார் 70 ஓட்டங்களையம் கே. நாதிசன் 33 ஓட்டங்களையும் பெற்றனர்.

இரு அணிகளுக்கும் இடையிலான மேற்படி கிரிக்கெட் போட்டி இம்முறை நான்காவது வருடமாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Wed, 12/12/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை