உலகில் மிக வேகமாக நகரும் டிரகுலா எறும்புஆபாச நடிகையின் டிரம்புக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உடன் தாம் பாலுறவு கொண்டதை வெளியில் தெரிவிக்காமல் இருக்க மிரட்டப்பட்டதாக கூறிய ஆபாசப் பட நடிகை ஸ்ட்ராமி டேனியல்ஸ், டிரம்ப் மீது தொட ர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், டிரம்ப் தரப்பின் சட்டச் செலவுகளில் சுமார் 75 வீதமான 2,93,052.33 டொலரை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

முன்பின் தெரியாத ஒருவரால் ஒரு வேளை தாம் மிரட்டப்பட்டிருக்கலாம் என்று டிரம்ப் தம்மைக் கேலி செய்ததாக ஸ்ராட்மி டேனியல்ஸ் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த உத்தரவு மேல்முறையீட்டில் நிலைக்காது என டேனியல்ஸ் தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

டிரம்புடன் 2006 ஆம் ஆண்டு ஒரு இரவு உறவு வைத்ததாக டேனியல்ஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதுபற்றி வெளியே கூறுவதை தவிர்க்கும் டிரம்புடனான உடன்படிக்கையை முறிப்பதற்கு இந்த ஆண்டு ஆரம்பத்தில் மற்றொரு வழக்கை தொடுத்திருந்தார். எனினும் இவ்வாறான உறவு ஒன்று இடம்பெறவில்லை என்று டிரம்ப் கடுமையாக மறுத்து வருகிறார்.

Thu, 12/13/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை