செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்புவது முட்டாள்தனமானது

நிலவில் வலம் வந்த முதல் மனிதர்களில் ஒருவரான பில் அன்டர்ஸ், செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்பும் திட்டம் முட்டாள்தனமானது என்று குறிப்பிட்டுள்ளார்.

பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து வெளியேறிய மனிதனை ஏற்றிய முதல் விண்கலமான அப்பலோ 8 இன் விண்வெளி வீரரான பில் அன்டர்ஸன் பி.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த போட்டியில் இதனை தெரிவித்துள்ளார். விண்வெளி வீரர்களை செவ்வாய்க்கு அனுப்புவது, “கிட்டத்தட்ட அபத்தமானது” என்றார்.

செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்புவதற்கு நாசா திட்டமிட்டு வருகிறது.

“செலவு குறைந்த சிறப்பான ஆய்வு இயந்திரங்களை (செவ்வாய்க்கு) அனுப்புவதற்கு நான் ஆதரவு கொண்டவன். அதிக செலவு கொண்ட மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க மாட்டார்கள்” என்று 85 வயதான அன்டர்ஸன் குறிப்பிட்டுள்ளார்.

1968 டிசம்பர் மாதம் சக விண்வெளி வீரர்களான பிரான்க் போர்மன் மற்றும் ஜிம் லொவல்லுடன் ‘சாடன் வீ’ ரொக்கெட் மூலம் விண்வெளிக்கு புறப்பட்ட அன்டர்ஸன் நிலவை 10 தடவைகள் வலம்வந்தார்.

Tue, 12/25/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை