ஐ.ம.சுமுவுக்கு எதிர்க்கட்சி தலைவராக முடியாது

சுமந்திரன் எம்.பி சபையில் வாதம்

 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் நிலையில் அந்தக் கட்சியைச் சேர்ந்த மற்றுமோர் உறுப்பினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட முடியாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அத்துடன், பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளைச் சாராத உறுப்பினர்கள் சபைக்கு சமுகமளித்தமை தொடர்பில் விசாரிப்பதற்குப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைத்து அதன் தீர்ப்பு வரும்வரை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இரா.சம்பந்தனே தொடர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றம் நேற்று பிற்பகல் 1 மணிக்கு கூட்டணி ஆகிய கட்சிகள் எதிர்ப்பைத் தெரிவித்தன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையிருந்தால் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்பது அவர்களுடைய நிலைப்பாடாக இருந்தது. நிறைவேற்று அதிகாரம் தான் தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமையை பறித்தது. வடக்கு, கிழக்கு, மலையக மக்கள் அனைவரும் பாதிக்க காரணமாக அமைந்தது.

கடந்த 51 நாட்கள் பெற்றுக்கொண்ட அனுபவத்தின் ஊடாக சிறுபான்மை தலைவர்கள் தமது நிலைப்பாட்டை மாற்றுவார்கள் என நம்புகின்றோம். 19ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து நிறைவேற்று அதிகாரத்தை கட்டுப்படுத்த முயற்சி எடுக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் அண்மைய தீர்ப்பை சிலர் தவறாக அர்த்தம் கற்பிக்கின்றனர். உச்சநீதிமன்றம் தேர்தல் நடத்தும் உரிமையை பறித்துவிட்டதாக ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். உண்மையில் உச்சநீதிமன்றம் தேர்தல் நடத்தும் உரிமையை பறிக்கவில்லை. மாறாக தேர்தலை நடத்துவதற்கான உரிமையை மீளவும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி தன்னிச்சையாக எடுத்த தீர்மானம் காரணமாக மக்களின் வாக்குரிமை மீறப்பட்டுள்ளது என்பதையே கூறியுள்ளது. மக்களின் வாக்குகள் மூலமாகத்தான் இந்த பாராளுமன்றம் இயங்கி வருகின்றது. ஐந்து ஆண்டுகளுக்கு பாராளுமன்றம் இயங்க வேண்டும் என்ற மக்களின் கட்டளை உள்ளது. மக்கள் ஆணையை ஒரு சிலர் தமது சுயநல நோக்கங்களுக்காக துஷ்பிரயோகம் செய்வதை அனுமதிக்க முடியாது. ஜனாதிபதியாக இருந்தாலும் வேறு யாராக இருந்தாலும் எவருக்கும் மக்கள் வாக்குரிமையை மீறமுடியாது என்பதை நீதிமன்றம் தீர்ப்பு மூலம் தெரிவித்துள்ளது.

கடந்த 50 நாட்களில்தான் நிறைவேற்று அதிகாரத்தின் மோசமான தன்மையை மக்கள் அறிந்துகொள்ள முடிந்தது.

புத்தகங்களில், கதைகளில் அறிந்துகொள்ள முடியாததை யதார்த்தமாக அனுபவம் மூலமாக அறிந்துகொள்ள முடிந்தது. அதன் மூலமாகத்தான் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என்ற கருத்து பலமடைய ஆரம்பித்தது என்றும் அவர் கூறினார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

 

Wed, 12/19/2018 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை