தங்காலையில் பொலிஸ் சமிக்ஞையை மீறி சென்ற வாகனம் மீது சூடு

Rizwan Segu Mohideen
தங்காலையில் பொலிஸ் சமிக்ஞையை மீறி சென்ற வாகனம் மீது சூடு-Shot at Van-Kudawella Junction

குடாவெல்ல பகுதியில் பொலிசாரின் சாமிக்ஞையை மீறிச் சென்ற வேன் மீது பொலிசார் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளனர்.

இன்று (26) அதிகாலை 1.30 மணி அளவில் குடாவெல்ல சந்தியில் உள்ள வீதித் தடை சோதனைச் சாவடியில் வைத்து பொலிசாரின் சாமிக்ஞையை மீறி, பொலிசாரை விபத்துக்குள்ளாக்கும் வகையில் சென்ற வேன் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளனர்.

அதன் பின்னர் குறித்த வாகனம் தொடர்ந்தும் நிறுத்தப்படாமல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த வேனின்  உரிமையாளரை தேடி தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

நேற்றைய தினம் (25) தங்காலை, குடாவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய குறித்த பிரதேசம் முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

நேற்று (25) காலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அங்கிருந்த நால்வர் உயிரிழந்ததோடு, மேலும் ஐவர் காயமடைந்து, தங்காலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் குற்றவியில் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட 11 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளில் ஈடுபட்டுவருவதோடு, தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் மாத்தறை, தங்காலை பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்திருந்தார்.

Wed, 12/26/2018 - 10:53


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை