பிரதமர் ரணில் நாளை கிளிநொச்சி விஜயம்

பாதிப்பு நிலைமைகளை நேரில் ஆராய ஏற்பாடு
வடக்கு அபிவிருத்திக்கு பாரிய  செயற்திட்டம் விரைவில் ஆரம்பம்

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங் களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது குறித்து ஆராய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை (28) கிளிநொச்சி பிரதேசத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள்,பாதுகாப்புத் தரப்பினர்,மதத் தலைவர்கள், சிவில் அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோரையும் பிரதமர் சந்திக்கவுள்ள தாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

வெள்ளம் காரணமாக அழிவடைந்துள்ள வடக்கின் சகல உட்கட்டமைப்பு வசதிக ளையும் துரிதமாக மேற்கொள்ளவென பாரிய செயற்திட்டமொன்றை ஆரம்பிக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் அலுவலகத்தில் நேற்று (26) நடை பெற்ற ஊடக மாநாட்டிலே அவர் இதனை தெரிவித்தார்.வெள்ளம் காரணமாக வடக் கில் பல பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டு ள்ளதாகவும் மாகாண சபை, உள்ளூராட்சி சபைகள், பிரதேச செயலகங்களின் பௌதீக மற்றும் மனித வளங்களை பயன்படுத்தி புதிய செயற்திட்டத்தை ஒரேதடவையில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.இப் பகுதிகளில் வெள்ளம் வடிந்து வருவதால் சில தினங்களில் பாதிக் கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வழங்க வேண்டிய நிவாரண செயற்பாடுகளை உறுதி செய்வது மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராயும் விசேட கூட்டமொன்றும் நேற்று கொழும்பில் நடத்தப்பட்டது. சகல மாவட்ட செயலாளர்களின் பங்களிப்புடன் இந்த கூட்டம் நடந்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

27,000 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 75,000 பேர் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த எண்ணிக்கை மேலும் அதிகரி க்கலாமென தெரிவித்த அவர்,பாதிக்கப்பட்ட சகலருக்கும் துரித நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.நிவாரணம் வழங்கு வதற்கு தேவையான நிதி ஒதுக்கப் பட்டுள்ளதுடன் குறைபாடுகளை ஆராய்ந்து நிவாரண செயற்பாடுகளை துரிதப்படுத்த பிரதமர் வட பகுதி செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்

சகலரதும் சொத்துக்கள் காப்புறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதனூடாகவும் இழப் பீடுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.(பா)

நமது நிருபர்

Thu, 12/27/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை