ஆப்கான் ஜனாதிபதி தேர்தல் மூன்று மாதங்கள் ஒத்திவைப்பு

ஆப்கானிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் மூன்று மாதங்கள் ஒத்திவைக்கப்பட்டதாக தேர்தல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆரம்பத்தில் ஏப்ரல் மாதம் இருந்த இந்தத் தேர்தல் தற்போது ஜூலை நடுப்பகுதி அல்லது ஓகஸ்ட் மாதம் நடைபெறும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்திருக்கும் பல முக்கிய வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கலுக்கான தகுதியை பூர்த்திசெய்ய முடியாத நிலை மற்றும் மோசமான காலநிலை இந்த முடிவுக்கு காரணம் என கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் முந்தைய தேர்தல்கள் ஊழல், மோசடி மற்றும் வாக்காளர் மீது அச்சுறுத்தல் என பல குழப்பங்கள் கொண்டதாக இருந்துள்ளன.

Fri, 12/28/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை