சவூதி அரேபிய சீர்திருத்த இளவரசர் தலால் மரணம்

சவூதி அரேபியாவில் சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக இருந்த இளவரசர் தலால் பின் அப்துல் அஸிஸ் தனது 87 ஆவது வயதில் கடந்த சனிக்கிழமை காலமானார்.

சவூதியின் பெரும் செல்வந்தரான அல்வலீத் பின் தலாலின் தந்தையும் சவூத் குடும்பத்தின் சிரேஷ்ட உறுப்பினருமான தலால் பல ஆண்டுகள் சுகவீனமுற்றிருந்தார்.

சவூதி அரச குடும்பத்திற்கு பெரும் போட்டியாக இருந்த எகிப்து முன்னாள் ஜனாதிபதி கமால் அப்துல் நாஸருடன் இணைந்து சவூதியில் அரசியலமைப்பு சீர்திருத்தங்களை கோரியதை அடுத்து சவூதி நிர்வாகம் இளவரசர் தலாலின் கடவுச் சீட்டை திரும்பப் பெற்றதால் அவர் 1960களில் வெளிநாட்டில் வாழவேண்டி ஏற்பட்டது.

எனினும் பைசல் பின் அப்துல் அஸிஸ் அல் சவூத் 1964இல் சவூதி மன்னராக முடிசூடிய பின் நாடு திரும்பிய அவர் தனது செல்வாக்கை அதிகரித்துக் கொண்டார்.

சவூதி பெண்களுக்கு தொழில் புரிய மற்றும் வாகனம் ஓட்ட வழங்கிய அனுமதிக்கு ஆதரவாக இருந்த அவர் நாட்டின் இராணுவ செலவை கட்டுப்படுத்துவதற்கு ஆதரவு வெளியிட்டு வந்தார்.

Mon, 12/24/2018 - 11:11


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை