பழைய மாணவர்கள் கட்டார் கிளை ஏற்பாட்டில் புட்சால் சுற்றுப்போட்டி

பென்டாஸ்மக் 5 இன் மூன்றாம் பருவகால புட்சால் சுற்றுப்போட்டியில் எவரெஸ்ட் கோல்ட் அணி சம்பியன் பட்டத்தையும் எவரெஸ்ட் கிறீன் அணி இரண்டாம் இடத்தையும் பெற்றன.

ஹமீட் அல் – -ஹூசைனி கல்லூரியின் கட்டாரில் உள்ள பழைய மாணவர் சங்கம் கட்டாரில் இப்போட்டியை நடத்தியிருந்தது.

கட்டாரின் பெர்லிங் சீபென் சர்வதேச கல்லூரி மைதானத்தில் இச்சுற்றுப் போட்டி நடைபெற்றது. கால்பந்தாட்ட பிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களும் மைதானத்தில் நிறைந்திருந்தனர்.

ஆசிய கால்பந்தாட்ட அகடமியின் இரு அணிகளுக்கிடையிலான கண்காட்சி கால்பந்தாட்டம், பிரீ ஸ்டைல் கால்பந்தாட்ட போட்டிகள் மற்றும் பல நிகழ்ச்சிகள் மைதானத்தில் குழுமியிருந்தவர்களை பரவசப்படுத்தினர். சுற்றுப்போட்டியின் பிரதான அனுசரணையாளர்களான அப்துல்லா அப்துல்கானி என்ட் பிரதர்ஸ் நிறுவனத்தின் ரசமுன்னிரா ரமில் சுற்றுப்போட்டியின் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இந்த சுற்றுப்போட்டியின் நோக்கம் கொழும்பு ஹமீட் அல்- – ஹுசைனி கல்லூரியின் கல்வி நிலையை மேம்படுத்துவதுடன் கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கிடையே நட்புறவை பலப்படுத்துவதும் ஆகும்.

Wed, 12/12/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை