குடியேற்றத்திற்கு ஆதரவளித்த பெல்ஜியம் பிரதமர் இராஜினாமா

பெல்ஜியம் பிரதமர் சார்ல்ஸ் மைக்கல், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

உலகளாவிய அகதிகள் தொடர்பான ஐ.நா ஒப்பந்தம் தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக, சார்ல்ஸ் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை, கூட்டணி பெல்மிஸ்ட் தேசிய கட்சி வாபஸ் பெற்றது.

கடந்த வாரத்தில் கையெழுத்தான குடியேற்றம் தொடர்பான ஐ.நா ஒப்பந்தம் ஒன்றுக்கு சார்ல்ஸ் மைக்கேல் ஆதரவு அளித்த காரணத்தால், இக்கூட்டணி கட்சி அரசுக்கான ஆதரவை விலக்கி கொண்டது.

குடியேற்றம் தொடர்பான ஐ.நா ஒப்பந்தத்துக்கு பிரதமர் ஆதரவு அளித்ததை அடுத்து இது தொடர்பாக பிரஸல்ஸில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதனால் சிறுபான்மை அரசாக சார்ல்ஸ் மைக்கலின் அரசாங்கம் மாறியது. இதனைத் தொடர்ந்து, பாராளுமன்றத்தில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டன.

இதனால் நெருக்கடியை மைக்கல், மன்னர் பிலிப்பிடம் இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார். வரும் மே மாதம் பாராளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் பிரதமர் பதவி விலகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Thu, 12/20/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை