பொதுத் தேர்தலை ஏப்ரலில் நடாத்த அரசு தீர்மானம்

பொதுத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குப் பின்னர் நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் ஐ.தே.கவின் தேசிய அமைப்பாளருமான அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

பொதுத் தேர்தலுக்காக கட்சியை தயார்படுத்துவது தொடர்பில் தாம் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட தலைவர்களுக்கு யோசனை தெரிவித்துள்ளதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பலமுள்ள ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமொன்றை அமைப்பதே கட்சியின் நோக்கமாகுமெனத் தெரிவித்த அவர், ஐ.தே.க எப்போதும் தேர்தலுக்கு தயாராகவேயுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

தேசிய அரசாங்கமாக எதிர்வரும் சில மாதங்களுக்கு அரசாங்கத்தை முன்னெடுப்பது ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்பார்ப்பாகும் எனத் தெரிவித்த அவர், அது தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்திலிருந்து விலகிக்கொண்டிருந்தாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், இதற்கிணங்க 2015 ஆகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்ட தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் நடைமுறையிலிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். (ஸ)

(லோரன்ஸ் செல்வநாயகம்)

Fri, 12/28/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை