விலையேற்றத்திற்கு எதிராக சூடானில் பெரும் ஆர்ப்பாட்டம்

சூடானில் பொருளாதார சுமை மற்றும் விலை அதிகரிப்புக்கு எதிராக இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்களில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரொட்டி விலையை சூடான் அரசு அதிகரிக்க தீர்மானித்ததை அடுத்தே நாடெங்கும் கடந்த புதன்கிழமை ஆர்ப்பாட்டம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் கிழக்கு நகரான அட்பாராவில் தொடங்கி ஆர்ப்பாட்டம் தலைநகர் கார்ட்டூம் வரை பரவியது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அரச கட்டிடங்களுக்கு தீமூட்டியதோடு அல் கதாரிப் நகரில் ஜனாதிபதி ஒமர் அல் பஷீரின் ஆளும் தேசிய கொங்கிரஸ் கட்சியின் அலுவலகமும் தீமூட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பஷீரின் 29 ஆண்டு ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசம் எழுப்பி வருகின்றனர்.

2011 ஆம் ஆண்டு தென் சூடான் தனி நாடாக பிரிந்ததை அடுத்து நாட்டின் பிரதான வெளிநாட்டு நாணய மூலமான எண்ணெய் வருவாயில் சூடான் முக்கால் பங்கு இழந்தது. இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அந்த நாடு தொடர்ந்து போராடி வருகிறது.

Mon, 12/24/2018 - 11:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை