மத்திய கிழக்குக்கான கடவுச்சீட்டு நிறுத்தம்

ஜனவரி 1ஆம் திகதி முதல் சகல நாடுகளுக்குரிய 'பாஸ்போட்' மாத்திரமே விநியோகம்

 ALL COUNTRIES

குடிவரவு குடியகல்வு திணைக்களம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாத்திரம் இதுவரை விநியோகித்து வந்த கடவுச்சீட்டு எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் வழங்கப்படமாட்டாது எனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஜனவரி முதலாந்திகதியிலிருந்து சகல நாடுகளுக்கான கடவுச் சீட்டு மாத்திரமே வழங்கப்படும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு இறுதிப்பகுதியில் இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகப்படுத்தப்படவிருப்பதால், திணைக்களம் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் வஜிர லியனாரத்ன நேற்று தினகரனுக்குத் தெரிவித்தார்.

இதனடிப்படையில் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்வதற்காக ஜனவரி முதலாம் திகதிக்குப் பின்னர் புதிதாக கடவுச்சீட்டைப் பெறுவோர் அல்லது கடவுச்சீட்டை புதுப்பிப்போர் சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டையே பெறுதல் வேண்டும் என்றும் அவர் கூறினார்.

டிசம்பர் 31ஆம் திகதிக்குப் பின்னர் எக்காரணம் கொண்டும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டு வழங்கப்படாது என்பதுடன், ஏற்கனவே மத்திய கிழக்கு நாடுகளுக்ெகனக் கடவுச்சீட்டைப் பெற்றுக்ெகாண்டுள்ளவர்கள் அதனைப் பயன்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேநேரம், அந்தக் கடவுச்சீட்டைப் புதுப்பிப்பது என்றால், சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டையே பெற்றுக்ெகாள்ள வேண்டும். மேலும், இலத்திரனியல் கடவுச்சீட்டு அடுத்தாண்டு அறிமுகப்படுத்தப்படும்போது சகலரும் இலத்திரனியல் கடவுச்சீட்டைப் பெற்றுக்ெகாள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்தாண்டு (2019) இறுதியில் அறிமுகமாகவுள்ள இலத்திரனியல் கடவுச்சீட்டில் உரிமையாளரின் சுயவிபரங்கள் அடங்கிய இலத்திரனியல் 'சிப்' இணைக்கப்பட்டிருக்குமென்றும் அவர் குறிப்பிட்டார்.

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் தற்போது மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டு கையிருப்பில் இல்லை. சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டுகள் மாத்திரமே இருப்பதால், இலங்கையர்கள் அனைவருக்கும் எதிர்காலத்தில் இலத்திரனியல் கடவுச்சீட்டை வழங்கும் வகையில், சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டை விநியோகித்து நிறைவு செய்வதற்கு இந்த நவடிக்ைக எடுக்கப்பட்டிருக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டுகளை மீண்டும் அச்சிட்டு விநியோகிப்பதால் ஏற்படும் வீண் விரயத்தைத் தவிர்ப்பது குறித்தும் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுக்குத் தொழிலுக்குச் செல்வோருக்குப் பல்வேறு நாடுகளிலும் தொழில் வாய்ப்புகள் கிடைக்கின்றன. அவ்வாறான வேளைகளில் அவர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடிகிறது. அதனால், இந்தத் தீர்மானத்தை இலங்கை வெ ளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகமும் வரவேற்றுள்ளதாகத் திரு.வஜிர லியனாரத்ன மேலும் தெரிவித்தார்.

சகல நாடுகளுக்கான கடவுச்சீட்டை ஒரு நாள் சேவையில் பெறுவதாயின் பத்தாயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

லக்ஷ்மி பரசுராமன்

Fri, 12/28/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை