பாதுகாப்பு தரப்பின் அர்ப்பணிப்பால் குறைந்தளவிலான உயிர்ச் சேதம்

வடக்கில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் 75,000 பேர் பாதிக்கப்பட்டாலும் உயிர்ச் சேத த்தை மட்டுப்படுத்த முடிந்துள்ளது.

பாதுகாப்பு தரப்பினர் மக்களை மீட்கும் பணிகளை திறம்பட முன்னெடுத்ததே இதற்கு காரணம் என இடர் முகாமைத்துவ மற்றும் பொது நிர்வாக அமைச்சர் வஜிர அபேவர்த ன தெரிவித்தார். பிரதமர் அலுவலகத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே அவர் இதனை தெரிவித்தார்.

வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டு வெள்ள அனர்த்தம் தொடர்பில் மேற்கொண்ட முன்னெடுப்புகள் குறித்து விளக்கிய அவர், வெள்ளத்தினால் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரவித்தார்.

இதில் 75,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஒரே ஒரு உயிரிழப்பு மாத்திரமே நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் அர்ப்பணிப் புடன் செயற்பட்டுள்ளனர்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரணங்களை அரசாங்கம் மாத்திரமன்றி தனியார் துறையும் மேற்கொண்டு வருகிறது.

பிரதமரின் வழிகாட்டலின் கீழ் சேதங்களை மட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. நான் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள முகாங்களுக்கும் சென்று அவர்களின் தேவைகளை கேட்டறிந்தேன். முகாம்களில் உள்ள மக்களுக்கு சமைத்த உணவும் ஏனையவர்களுக்கு உலர் உணவும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மக்களை காப்பாற்ற செயற்பட்ட முப்படை மற்றும் பொலிஸாருக்கு எமது நன்றியை தெரிவிக்கிறேன்.

தமது நகைகளை ஈடு வைத்து விவசாயம் செய்த நிலையில் அவை அழிவடைந்துள்ளன. இது தொடர்பில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அறிக்கை சமர்ப்பித்து தேவையான ஏற்பாடுகளை செய்ய இருக்கிறோம். கால்நடைகள் அழிவினாலும் சுயதொழில் நாசமடைந்ததாலும் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் எடுக்கும்.

Thu, 12/27/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை