சட்டவிரோத திரவ உணவு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி சேர் றாசீக் பரீத் மாவத்தையில் சட்டவிரோதமான முறையில் இயங்கிவந்த திரவப் பொருள் உணவு உற்பத்தி நிலையம் இன்று(30) காலை சுகாதார பரிசோதகர்கள் முன்னிலையில் காத்தான்குடி நகரசபை தவிசாளரினால் முற்றுகையிடப்பட்டது.

போத்தலில் அடைக்கப்பட்ட எலுமிச்சம் பழச்சாறு, குளுக்கோஸ் பக்கட்டுகள், ஓமத்திரவம் உட்பட பல திரவ உணவுப்பொருட்கள் போலியான முறையில் இங்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி, ஜெர்மன் உட்பல வெளிநாடுகளின் பெயர்களில் தயாரிக்கப்படுவதாக அச்சிடப்பட்ட லேபல்களும் பெருமளில் கைப்பற்றப்பட்டுள்ளன.

இங்கு தயாரிக்கப்படும் போலியான திரவப்பொருட்கள் போலி லேபல்கள் ஒட்டப்பட்டு மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் கடைகளில் விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளமை  தெரியவந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த நிலையத்தின் உரிமையாளர்தலைமறைவாகியுள்ள நிலையில் சுகாதார பிரிவினர் தேடி வருகின்றனர். குறித்த சட்டவிரோத உற்பத்தி நிலையம் சுகாதார பிரிவினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

ரீ.எல்.ஜவ்பர்கான்-மட்டக்களப்பு குறூப் நிருபர்

 

Sun, 12/30/2018 - 16:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை