சு.க எம்பிக்கள் எதிரணியில் அமர முடிவு

எதிரணியில் அமர்வதற்கு சுதந்திரக் கட்சி பாராளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற சுதந்திரக் கட்சி பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாக சு.க பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சு.க பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் சு.க பாராளுமன்ற உறுப்பினர்கள் 21 பேர் பங்பேற்றதாக அறிய வருகிறது. நல்லாட்சி அரசாங்கத்திலும் அதன் பின்னர் 50 நாட்கள் நீடித்த ஐ.ம.சு.மு அரசாங்கத்திலும் ஆளும் தரப்பில் இருந்த சு.க எம்.பிகள் ஐ.தே.க அரசாங்கத்தில் இணையாது எதிரணியில் அமர முடிவு செய்துள்ளனர்.இது தொடர்பில் கருத்து தெரி வித்த நிசாந்த முதுஹெட்டி எம்.பி, பொதுஜன பெரமுனவும் சு.கவும் இணைந்து எதிரணியில்  ஒன்றாக செயற்படும். எதிர்க்கட்சி தலைவர் பதவி எமக்கு வழங்கப்பட வேண்டும் என்றார்.

சு.க எம்.பிகள் சிலர் ஐ.தே.கவில் இணைய இருப்பதாக சில ஊடகங்கள் கூறியிருந்தாலும் அனைத்து சு.க எம்.பிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றதாக அறிய வருகிறது. (பா)

 

Tue, 12/18/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை