ஆயுத விற்பனையில் ரஷ்யா முன்னேற்றம்

அமெரிக்காவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஆயுத உற்பத்தி நாடாக ரஷ்யா உருவெடுத்திருப்பதாக சுவீடன் ஆய்வு நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஆயுத உற்பத்தி நாடாக 2002 தொடக்க இருந்து வந்த பிரிட்டனையே ரஷ்யா பின்தள்ளியுள்ளது.

2017 ஆம் ஆண்டு உலகின் மொத்த ஆயுத விற்பனையான 398.2 பில்லியன் டொலரில் ரஷ்யா 9.5 வீதமாக 37.7 பில்லியன் டொலருக்கு ஆயுத விற்பனையில் ஈடுபட்டிருப்பதாக ஸ்டொக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதில் அமெரிக்காவின் மொத்த ஆயுத விற்பனையில் 57 வீதத்தை கொண்டிருப்பதோடு பிரிட்டன் 9 வீதத்துடன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இது தவிர, துருக்கியின் ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் 2017 இல் தனது ஆயுத விற்பனையை 24 வீதமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wed, 12/12/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை