அமெ. இராணுவ செய்மதி விண்ணில் செலுத்தப்பட்டது

நான்கு முறை ஏற்பட்ட தடங்கலுக்கு பின்னர் அமெரிக்க இராணுவத்துக்கான செய்மதியை, ஸ்பேஸ் எக்ஸ் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

லொக் ஹீட்மார்டின் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஜி.பி.எஸ் செய்மதி பால்கன் 9 ரொக்கெட் மூலம் விண்ணில் ஏவ ஸ்பேஸ் எக்ஸ் திட்டமிட்டது. ஆனால் வானிலை மாற்றம் காரணமாக கடந்த 4 முறையும் கடைசி நேரத்தில் ஏவும் முயற்சி கைவிடப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்ளுர் நேரப்படி காலை 8.51 மணி அளவில் புளோரிடாவில் உள்ள கேப் கெனவெரலில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. அமெரிக்க பாதுகாப்புத்துறைக்காக ஸ்பேஸ் எக்ஸ் அனுப்பும் முதல் செய்மதி இது என்பதால், ஸ்பேஸ் எக்சின் நிறுவனர் எலன் மஸ்கிற்கு முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.

இந்த அடுத்த தலைமுறை ஜி.பி.எஸ் செய்மதி முந்தைய வடிவத்தை விடவும் மூன்று மடங்கு தெளிவானது என்று அமெரிக்க விமானப் படை பேச்சாளர் ஹீதர் வில்சன் குறிப்பிட்டுள்ளார்.

Tue, 12/25/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை