சம்மாந்துறையில் சென்றாலியன் கிரிக்கெட் சுற்றுப்போட்டி; புதிய சீருடை வெளியீடு

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய தேசிய கல்லூரியின் 110ஆண்டுகள் நிறைவையொட்டி இன்று(22) சனிக்கிழமையும் நாளையும் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது .

இதனை கல்லூரியின் பழைய மாணவர்சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

அணிக்கு 11பேர் கொண்ட 5ஓவர் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இதுவரை 24 அணிகள் தங்கள் பெயர்களைப்பதிவுசெய்துள்ளன.

அதற்கான சீருடை சென்றாலியன் ரீசேர்ட் வெளியிட்டுவைக்கப்பட்டது. அதனை பழையமாணவர்சங்கத்தலைவரும் அதிபருமான முத்து இஸ்மாயில் திரைநீக்கம் செய்துவைத்தார். உதவிச்செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ.பௌசானும் திரைநீக்கம் செய்துவைத்தார்.

அதன்போது முன்னாள் அதிபர்களான எம்.ஏ.பாறூக் எஸ்.மரைக்கார்தம்பி எஸ்.எல்.எ.சலாம் எம்.ஏ.தம்பிக்கண்டு திருமதி மகராசி செய்னுலாப்தீன் மற்றும் பழையமாணவர்சங்க நிருவாகிகளும் கலந்துசிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Sat, 12/22/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை