7ஆவது தடவையாகவும் எஸ்.எஸ்.சி கழகத்தின் ஆடை பங்காளியான கந்துரட்ட குடைகள்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு நட்சத்திர வீரர்களைப் பெற்றுக்கொடுத்து வருகின்ற முன்னணி கிரிக்கெட் கழகங்களில் ஒன்றான எஸ்.எஸ்.சி கழகம், இலங்கையின் தரம்வாய்ந்த குடைகளையும்,காலுறைகள், நுளம்பு வலைகளை உற்பத்திசெய்யும் கந்துரட்ட குழுமத்துடன் தொடர்ந்து 7ஆவது தடவையாகவும் தனது உறவை மீண்டும் புதுப்பித்துள்ளது.

இதற்கமைய, அடுத்தவருடம் பூராகவும் உள்ளூர் மற்றும் வெள்நாட்டுதொடர்களில் இடம்பெறும் போட்டிகளில் எஸ்.எஸ்.சிகழகத்தின் உத்தியோகபூர்வ ஆடை பங்காளியாக தொடர்ந்து செயற்படுவதற்கு அண்மையில் ஒப்பந்தம் செய்து கொண்டது.

119 வருடவரலாற்றைக் கொண்ட எஸ்.எஸ்.சி கிரிக்கெட் கழகம்,உள்ளூர் முதற்தர கிரிக்கெட் தொடர்களில் அண்மைக் காலமாக பலவெற்றிகளைப் பதிவுசெய்துவருகின்றன. அதிலும் குறிப்பாக அண்மையில் நிறைவுக்கு வந்த வளர்ந்துவரும் வீரர்களுக்கான கழகங்களுக்கிடையிலான 2 நாட்கள் கொண்டபோட்டித் தொடரில் சம்பியன் பட்டத்தையும் வென்றது.

இந்தகழகத்துக்காக விளையாடிய கிரிக்கெட் வீரர்களில் 30 பேர் இலங்கை டெஸ்ட் அணிக்காக விளையாடியுள்ளதுடன்,பெரும்பாலான வீரர்கள் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளிலும் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளனர்.

அதுமாத்திரமின்றி, 1996 உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணியின் தலைவராக செயற்பட்ட அர்ஜுன ரணதுங்கவும் எஸ்.எஸ்.சி கழகத்தின் முன்னாள் வீரர் என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும். எஸ்.எஸ்.சி கழகத்துக்கான அனுசரணையை கந்துரட்ட அம்ரெல்லா இன்டஸ்ட்ரீஸ் பிறைவேட் லிமிடெட் அதிபர் எம்.ரி.எம் நௌஷாத் எஸ்.எஸ்.சி கழகத்தின் பிரதிநிதிகளிடம் அண்மையில் கையளித்தார்.

இந்தநிகழ்வு கடந்த 03ஆம் திகதி எஸ்.எஸ்.சி கழக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது கந்துரட்ட அம்ரெல்லா இன்டஸ்ட்ரீஸ் பிறைவேட் லிமிடெட்டின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.ரீ.எம் நௌபல், எஸ்.எஸ்.சிகழகத்தின் பயிற்சியாளர் திலினகண்டம்பி, எஸ்.எஸ்.சிகழகத்தின் தலைவர் தம்மிக்க பிரசாத், எஸ்.எஸ்.சி கிரிக்கெட் குழுத் தலைவர் சமன்த தொடன்வெல, கிரிக்கெட் குழு மற்றும் மைதான செயலாளர் மைக்கல் டி சொய்ஸா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இலங்கையின் பல விளையாட்டுக்களுக்கு தமது அனுசரணையினை வழங்கிவருகின்ற கந்துரட்ட அம்ரெல்லா இன்டஸ்ட்ரீஸ் பிறைவேட் லிமிடெட் நிறுவனம்,அண்மையில் மலேஷியாவில் நிறைவுக்குவந்த 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ணத் தொடரில் இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் காலுறைகளின் அனுசரணையாளராகவும், கண்டிதிருத்துவக் கல்லூரி றக்பி அணியின் பிரதான அனுசரணையாளராகவும் செயற்பட்டுவருகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

(பீ.எப் றிஷாட்)

Fri, 12/14/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை