நுகர்வோர் அதிகார சபை சுற்றிவளைப்பில் இம்மாதம் ரூ. 44 இலட்சம் அபராதம்

Rizwan Segu Mohideen
நுகர்வோர் அதிகார சபை சுற்றிவளைப்பில் இம்மாதம் ரூ. 44 இலட்சம் அபராதம்-Consumer Affairs Authority-Court Cases-Fine-2018

- டிசம்பர் மாதம் மாத்திரம் ரூ. 44 இலட்சம் அபராதம்
- இவ்வருடம் நவம்பர் வரை ரூ. 8 கோடிக்கு அதிக அபராத வருமானம்

நுகர்வோர் அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் மூலம் இம்மாதம் முதலாம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை மாத்திரம் ரூபா 44 இலட்சத்து 53 ஆயிரம் அபராத விதிக்கப்பட்டுள்ளது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிகார சபை சுற்றிவளைப்பில் இம்மாதம் ரூ. 44 இலட்சம் அபராதம்-Consumer Affairs Authority-Court Cases-Fine-2018

அதனடிப்படையில் டிசம்பர் 01 ஆம் திகதி முதல் டிசம்பர் 23 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட 1,668 சுற்றிவளைப்புகளில் 1,060 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் ரூபா 44 இலட்சத்து 53 ஆயிரம் (ரூ. 4,453,000) அபராதமாக பெறப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை இவ்வருடம் ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை மேற்கொள்ளப்பட்ட 21,188 சுற்றிவளைப்புகளில் 20 1254 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது அதன்மூலம் ரூபா 8 கோடி 88 லட்சத்து 88 ஆயிரத்து 850 (ரூ.88,805,850)  அபராதம் மூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பண்டிகை காலத்தை முன்னிட்டு டிசம்பர் 16 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட 560 சுற்றிவளைப்புகளில் ஆறு வழக்குகள் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் நீதிமன்ற விடுமுறை காரணமாக இவ்வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சபை சுட்டிக்காட்டியுள்ளதோடு, அதிலிருந்து ரூபா 25,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wed, 12/26/2018 - 12:13


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை