ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.30 மில்லியன் வழங்க நடவடிக்ைக

மாத்தறை வரவேற்பு நிகழ்வில் அமைச்சர் மங்கள

கம்பெரலிய அபிவிருத்தி திட்டத்தை மீண்டும் ஆரம்பித்து ஒவ்வொரு தொகுதிக்கும் இதற்காக 30 மில்லியன் ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

மாத்தறையில் திங்கட் கிழமை (24) நடைபெற்ற வரவேற்பு வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாத்தறை பம்புரனையில் கட்சி ஆதரவாளர்களினால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் , கறுப்பு வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சதியின் காரணமாக எமது பயணம் தற்காலிகமாக தடைப்பட்டதுடன் நாம் மீண்டும் பயணத்தை ஆரம்பித்துள்ளோம். உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் மூலம் 24 மணித்தியாலத்துக்குள் நாம் இடைக்கால வரவு செலவு திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து சம்மதத்தை பெற்றோம்.

இந்த இடைக்கால வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்காது போனால் அரசாங்க ஊழியர்கள், ஓய்வூதியர்கள், சமுர்த்தி அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்தைச் சேர்ந்த ஊழியர்களுக்கு ஜனவரியில் சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். இந்த இடைக்கால கணக்கு விபரம் தற்காலிகமானது.

2019ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைவதற்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென்று அமைச்சர் கூறினார்.

வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்படும் வரை இருக்காது எமது அபிவிருத்தி திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மாத்தறை தினகரன் நிருபர்

Wed, 12/26/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை