2nd Test : SLvNZ; இலங்கையை மீண்டும் மீட்டெடுத்த மெத்திவ்ஸ்

Rizwan Segu Mohideen
2nd Test : SLvNZ; இலங்கையை மீண்டும் மீட்டெடுத்த மெத்திவ்ஸ்-2nd Innings-SLvNZ-Stumps-SL88-4

- பந்து வீச்சில் சுரங்க லக்மால் அபாரம்

சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் நிறைவில் தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி, இன்றைய நாளின் (26) முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 88 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

க்ரிஸ்ட்சேர்ச்சில் இன்று (26) ஆரம்பமான போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார்.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய நியூசிலாந்து அணியை சுரங்க லக்மால் தனது நேர்த்தியான பந்து வீச்சின் மூலம் கட்டுப்படுத்தினார்.

போட்டியின் ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக 16 ஓவர்கள் பந்து வீசிய லக்மால் தொடர்ச்சியான இடைவெளிகளில் நியூசிலாந்து அணியின் முன்கள துடுப்பாட்ட வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். 64 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நியூசிலாந்து அணியை டிம் சவ்தி மற்றும் வட்லிங் ஜோடி ஓரளவு கெளரவமான நிலைக்கு கொண்டு சென்றது.

சிறப்பாக ஆடிய டிம் சவ்தி 68 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை தனுஷ்க குணதிலகவின் அபாரமான பிடியெடுப்பின் மூலம் ஆட்டமிழக்கச் செய்யப்பட்டார்.

அதன் பின்னர் தேநீர் இடைவேளையின் பின்னர் நியூசிலாந்து அணியின் இன்னிங்ஸ் நிறைவுக்கு வந்தது. நியூசிலாந்து சார்பாக டிம் சவ்தி 68 ஓட்டங்களையும் வட்லிங் 46 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் தனது சிறப்பான  பந்து வீச்சுப்பெறுதியை பதிவு செய்த சுரங்க லக்மால் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியதுடன் லஹிரு குமார 3 விக்கெட்டுகளையும் தில்ருவன் பெரேரா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஏற்கனவே பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் நியூசிலாந்து பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை எதிர்கொள்வது இலங்கை துடுப்பாட்ட வீரர்களுக்கு கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கேற்றாற்போல் இலங்கை அணியின் துடுப்பாட்டமும் அமைந்தது.

ஒரு கட்டத்தில் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த இலங்கை அணி, மீண்டுமொருமுறை ஜோடி சேர்ந்த மெத்திவ்ஸ் மற்றும் குசல் மெண்டிஸ் ஜோடி 30 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த வேளை அநாவசியமான துடுப்பாட்டம் மூலம் குசல் மெண்டிஸ் 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் ரொஷேன் சில்வாவுடன் இணைந்த மெத்திவ்ஸ் மேலும் விக்கெட் இழப்பு ஏற்படா வண்ணம் நிதானமாக துடுப்பெடுத்தாடி இன்றைய முதலாம் நாளை நிறைவு செய்தார்.

அதற்கமைய இன்றைய நாளின் முடிவில் மெத்திவ்ஸ் 27 ஓட்டங்களுடனும் ரொஷேன் சில்வா 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளனர்.

பந்து வீச்சில் டிம் சவ்தி 3 விக்கெட்டுகளையும் கொலின் டி க்ரேண்ட்ஹோம் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

முதலாவது இன்னிங்ஸ்
நியூசிலாந்து 178/10 (50)

டிம் சவ்தி 68 (65)
பி ஜே வட்லிங் 46 (90)

சுரங்க லக்மால் 5/54 (19)
லஹிரு குமார 3/49 (14)
தில்ருவன் பெரேரா 1/13 (5)

இலங்கை 88/4 (32)
அஞ்சலோ மெத்திவ்ஸ் 27* (64)
ரொஷேன் சில்வா 15* (47)

டிம் சவ்தி 3/29 (11)
க்ரேன்ட்ஹோம் 1/19 (6)

Wed, 12/26/2018 - 18:11


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை