2nd Test: SLvNZ; நியூசிலாந்து அபாரம்; வெற்றி இலக்கு 660

Azaff Mohamed
2nd Test: SLvNZ; நியூசிலாந்து அபாரம்; வெற்றி இலக்கு 660-2nd Test-SLvNZ-Innings Break-SL-Target-660

சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 585 ஓட்டங்களைக்குவித்து ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

231 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இன்றைய (28) 3 ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த நியூசிலாந்து அணி இலங்கை பந்து வீச்சாளர்களின் பந்துகளை மிக இலகுவாக எதிர்த்தாடியது. மீண்டுமொருமுறை சிறப்பாக ஆடிய டொம் லதம் 176 ஓட்டங்களைப்பெற்றார்.

மறுமுனையில் இறுதி வரை களத்திலிருந்த ஹென்றி நிகொல்ஸ் 162 ஓட்டங்களைப்பெற்று டெஸ்ட் போட்டிகளில் தனது தனிப்பட்ட அதிகபட்ச  ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்தார். டொம் லதமின் ஆட்டமிழப்பைத் தொடர்ந்து களம் கண்ட கொலின் டி க்ரேன்ட்ஹோம் டெஸ்ட் போட்டிகளில் தனது வேகமான அரைச்சத்த்தை பதிவு செய்ததுடன் இறுதி வரை களத்தில் இருந்து 71 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்து வீச்சில் லஹிரு குமார 2 விக்கெட்டுகளையும் சமீர மற்றும் தில்ருவன் பெரேரா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

முன்னதாக நியூசிலாந்து அணி தமது முதல் இன்னாங்ஸுக்காக 178 ஓட்டங்களையும் இலங்கை அணி 104 ஓட்டங்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

முதலாவது இன்னிங்ஸ்
நியூசிலாந்து 178/10 (50)

டிம் சவ்தி 68 (65)
பி ஜே வட்லிங் 46 (90)

சுரங்க லக்மால் 5/54 (19)
லஹிரு குமார 3/49 (14)
தில்ருவன் பெரேரா 1/13 (5)

இலங்கை 105/10 (41)
அஞ்சலோ மெத்திவ்ஸ் 33* (88)
ரொஷேன் சில்வா 21 (63)

ட்ரெண்ட் போல்ட் 6/30 (15)
டிம் சவ்தி 3/35 (15)
க்ரேன்ட்ஹோம் 1/19 (6)

இரண்டாவது இன்னிங்ஸ்
நியூசிலாந்து 231/2 (79)

டொம் லதம் 176 (370)
ஹென்றி நிக்கோல்ஸ் 162* (225)
ஜீட் ராவல் 74 (162)
கொலின் டி க்ரேன்ட்ஹோம் 71 (45)

லஹிரு குமார 2/134 (32)
துஷ்மந்த சமீர 1/147 (30)
தில்ருவன் பெரேரா 1/149 (41)

இலங்கை 24/2* (14.0)

வெற்றி இலக்கு 660

Fri, 12/28/2018 - 10:37


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை