2nd Test: SLvNZ; நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 178

Azaff Mohamed
2nd Test: SLvNZ; நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 178-2nd Test-SLvNZ-Innings Break

சுரங்க லக்மால் அபாரம் 5/54

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணியை 178 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தியது இலங்கை அணி.

நியூசிலாந்தின் க்ரிஸ்ட்சேர்ச் மைதானத்தில் இன்று (26) ஆரம்பமான போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் தினேஷ் சந்திமால் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார்.

இதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியை முழுமையாக கட்டுப்படுத்தினர் சுரங்க லக்கமால். ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை வீழ்த்திய சுரங்க லக்மால் சக வீரர்களின் அபாரமான களத்தடுப்பில் உதவியுடன் நியூசிலாந்து அணியின் ஓட்டக்குவிப்பைக் கட்டுப்படுத்தினார்.

64 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வேளை வட்லிங் மற்றும் டிம் சவ்தி ஆகியோரின் சிறப்பான இணைப்பாட்டம் மூலம் நியூசிலாந்து அணியை கெளரவமான நிலைக்கு கொண்டு சென்றனர். அபாரமாக ஆடிய டிம் சவ்தி 68 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை தனுஷ்க குணதிலகவின் பிரம்மிக்கத்தக்க பிடியெடுப்பு மூலம் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் சடுதியாக நியூசிலாந்து அணியின் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட தேநீர் இடைவேளையின் பின்னர் நியூசிலாந்து அணியின் முதலாவது இன்னிங்ஸ் நிறைவுக்கு வந்தது.

மிக சிறப்பாக பந்து வீசிய லக்மால் ஒரு இன்னிங்ஸுக்கான தனது சிறப்பான பந்து வீச்சுப்பெறுதயை பதிவு செய்ததோடு மிக நீண்ட நேர பந்து வீச்சு ஓவர்களை மேற்கொண்டு வரலாற்றில் இடம்பெற்றார்.

லக்மால் தொடர்ச்சியாக 16 ஓவர்கள் பந்து விசியிருந்தமை குறிப்பிடத்தக்கது. லக்மால் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் லஹிரு குமார 3 விக்கெட்டுகளையும் தில்ருவன் பெரேரா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

முதலாவது இன்னிங்ஸ்
நியூசிலாந்து 178/10 (50)
டிம் சவ்தி 68 (65)
பி ஜே வட்லிங் 46 (90)

சுரங்க லக்மால் 5/54 (19)
லஹிரு குமார 3/49 (14)
தில்ருவன் பெரேரா 1/13 (5)

இலங்கை 10/1 (5.2)

Wed, 12/26/2018 - 09:19


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை