2018 A/L பெறுபேறுகள் இணையத்தில் வெளியாகின

Rizwan Segu Mohideen
2018 A/L பெறுபேறுகள் இணையத்தில் வெளியாகின-2018 GCE AL-Exam-Results-Released

2018 க.பொ.த. உயர் தர பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

பெறுபேறுகளை,

www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk எனும் பரீட்சை திணைக்களத்தின் இணையத்தில் இலவசமாக அறிந்துகொள்ள முடியும்.

2018 கடந்த ஓகஸ்ட் 06 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 01 ஆம் திகதி வரை இடம்பெற்றது.

இம்முறை, கல்விப்பொதுத்தராதரப் பத்திர உயர் தர பரீட்சைக்கு 3 இலட்சத்து 21 ஆயிரத்து 469 பரீட்சார்த்திகள் (321,469) பரீட்சை எழுத தகுதி பெற்றிருந்தனர்.

இப்பரீட்சைகள் நாடு முழுவதிலுமுள்ள 311 இணைப்பு மத்திய நிலையங்களின் ஊடாக 2,268 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

Sat, 12/29/2018 - 22:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை