2018 தரம் 5 புலமைபரிசில்; பிரபல பாடசாலைக்கான வெட்டுப்புள்ளிகள்

Rizwan Segu Mohideen
20118 தரம் 5 புலமைபரிசில்; பிரபல பாடசாலைக்கான வெட்டுப்புள்ளிகள்-Grade 5-2018-Cut-Off-Marks for Famous School

இவ்வருடம் (2018) இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களை, எதிர்வரும் வருடத்தில் பிரபல பாடசாலையின் தரம் 6 இற்கு இணைப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த ஓகஸ்ட் 05 ஆம் திகதி இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சிங்கள மொழி மூலம் 267,770 பேரும் தமிழ் மொழி மூலம் 87,556 பேரும் என 355,326 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

அதன் பெறுபேறுகள் கடந்த ஒக்டோபர் 05 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றையதினம் (12) கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த வெட்டுப்புள்ளிகள் பட்டியலின் அடிப்படையில்,  ஆண்கள் பாடசாலைகளில் தமிழ் மொழி மூலம், றோயல் கல்லூரியில் மாணவர்களை இணைப்பதற்கான குறைந்தபட்ச புள்ளிகளாக 187 புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் பாடசாலைகளில் அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் கண்டி, பெண்கள் உயர் தர பாடசாலைக்கான வெட்டுப்புள்ளியாக 185 புள்ளிகளும், கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கான வெட்டுப்புள்ளியாக 180 புள்ளிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

கலவன் பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில், ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரிக்கு 178 புள்ளிகளும், கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரிக்கு 170 புள்ளிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

20118 தரம் 5 புலமைபரிசில்; பிரபல பாடசாலைக்கான வெட்டுப்புள்ளிகள்-Grade 5-2018-Cut-Off-Marks for Famous School

 

ஆண்கள் பாடசாலை - வெட்டுப் புள்ளிகள்

  • கொழும்பு ரோயல் கல்லூரி - 187
  • கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரி - 183
  • டி.எஸ் சேனாநாயக்க கல்லூரி, கொழும்பு 07 - 178
  • பருத்திதுறை ஹாட்லி கல்லுரி - 176
  • இசிபத்தான கல்லூரி, கொழும்பு 05 - 175
  • மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி - 165
  • சாய்ந்தமருது சாஹிரா கல்லூரி - 164
  • யாழ். இந்துக் கல்லூரி - 164
  • யாழ். மத்திய கல்லூரி - 164
  • காத்தான்குடி மத்திய கல்லூரி - 164
  • திருகோணமலை கோணேஸ்வரா இந்து கல்லூரி -162

பெண்கள் பாடசாலை - வெட்டுப் புள்ளிகள்

  • பெண்கள் உயர்தர பாடசாலை, கண்டி - 185
  • முஸ்லிம் மகளிர் கல்லூரி, பம்பலப்பிட்டி - 180
  • விகாரமகாதேவி பாலிகா மகா வித்தியாலயம், கண்டி - 179
  • புனித அந்தோனியார் பெண்கள் பாடசாலை, கண்டி - 176
  • வின்சென்ட் பெண்கள் உயர்தர பாடசாலை, மட்டக்களப்பு - 173
  • புனித கெப்ரியல் பெண்கள் கல்லூரி, ஹட்டன் - 171 மெதடிஸ்ட் பெண்கள் உயர்தர பாடசாலை, பருத்தித்துறை - 171
  • இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, பம்பலப்பிட்டி - 169
  • மஹ்மூத் பாலிகா கல்லூரி, கல்முனை - 168
  • ஶ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி, திருகோணமலை - 168
  • வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை, யாழ்ப்பாணம் - 167
  • பாத்திமா பெண்கள் மகா வித்தியாலயம், புத்தளம் - 166
  • பதியுத்தீன் மஹ்மூத் பாலிகா வித்தியாலயம், கண்டி - 165
  • புனித சிசிலியா பெண்கள் கல்லூரி, மட்டக்களப்பு - 164

கலவன் பாடசாலை - வெட்டுப் புள்ளிகள்

  • ஹைலன்ட்ஸ் கல்லூரி, ஹட்டன் - 178
  • கேம்பிரிட்ஜ் கல்லூரி, கொட்டகலை - 170
  • பதுரியா மகா வித்தியாலயம், மாவனல்லை - 169
  • விவேகானந்தா கல்லூரி, கொழும்பு 12 - 166
  • மூதுர் மத்திய கல்லூரி, மூதுர் - 166
  • அல் முபாரக் கல்லூரி, மல்வாணை - 165
  • அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி, அட்டாளைச்சேனை - 165
  • கெக்குணகொல்ல தேசிய பாடசாலை, கெக்குணகொல்ல - 165
  • ஊவா விஞ்ஞான கல்லூரி, ஹாலி எல - 165
  • சாஹிரா முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம், மாவலனல்லை - 165
  • கொக்குவில் இந்து கல்லூரி, கொக்குவில் - 164
  • ஶ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி, அக்கரைப்பற்று - 164
  • வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலம், வவுனியா - 164
  • வாழைச்சேனை அன் நூர் மகா வித்தியாலயம், வாழைச்சேனை - 164
  • அலிகார் மத்திய கல்லூரி, ஏறாவூர் - 164
  • சாவகச்சேரி இந்து கல்லூரி, சாவகச்சேரி - 164
  • கார்மேல் பாத்திமா கல்லூரி, கல்முனை - 163
  • புனித ஜோசப் தமிழ் வித்தியாலயம், மஸ்கெலியா - 162
  • அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலை, ஹப்புகஸ்தலாவ - 162

20118 தரம் 5 புலமைபரிசில்; பிரபல பாடசாலைக்கான வெட்டுப்புள்ளிகள்-Grade 5-2018-Cut-Off-Marks for Famous School

 

  • 20118 தரம் 5 புலமைபரிசில்; பிரபல பாடசாலைக்கான வெட்டுப்புள்ளிகள்-Grade 5-2018-Cut-Off-Marks for Famous School
Wed, 12/12/2018 - 18:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை