1st Test: SLvNZ; முதல் நாள் ஆட்டம் நிறைவு; இலங்கை 275/9

Azaff Mohamed
1st Test: SLvNZ; முதல் நாள் ஆட்டம் நிறைவு; இலங்கை 275/9-1st Test-SLvNZ-Stumps-Day01-SL275-9-Mathews

- அணியை மீட்ட திக்வெல்ல ஆட்டமிழக்காது 73
- மெத்திவ்ஸ் சிறப்பாக ஆடி 83; கருணாரத்ன 79

சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி இலங்கை அணி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 9 விக்கெட் இழப்பிற்கு 275 ஓட்டங்களைப் பெற்றது.

நியூசிலாந்தின் வெல்லிங்டனில் இடம்பெறும் இப்போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. ஏற்கனவே டிம் சவ்தி மற்றும் ட்ரெண்ட் போல்ட் ஆகியோரின் பந்து வீச்சுக்கு இலங்கை அணி தாக்குப்பிடிக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில் அதற்கு ஏற்றாற் போலேயே இலங்கை அணியின் நிலையும் அமைந்தது. முதலாவது ஓவரிலேய இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக தனுஷ்க குணதிலக ஒரு ஓட்டத்துடனும் அதன் பின் தனஞ்சய டி சில்வா மற்றும் குசல் மென்டிஸ் ஆகியோர் அடுத்தடுத்து ஒற்றை ஓட்ட இலக்கத்துடன் ஆட்டமிழக்க இலங்கை அணி 9 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது. எனினும் 4ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த அஞ்சலோ மெத்திவஸ் மற்றும் திமுத் கருணாரத்ன இலங்கை அணியை கெளரவமான நிலைக்கு கொண்டு சென்றது.

இலங்கை அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கை 142 ஆக இருந்த வேளை கருணாரத்ன 79 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களம் கண்ட அணித்தலைவர் சந்திமால் 6 ஒட்டங்களுடன் ஆட்டமிழக்க மெத்திவ்ஸ் நிதானமாக ஓட்டங்களை குவித்த போதிலும் 83 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன் பின் களம் கண்ட நிரோஷன் திக்வெல்ல பின்கள வீரர்களின் துணையுடன் ஓட்டங்களை குவிக்க இலங்கை அணி சிறப்பான ஓட்ட எண்ணிக்கையை எட்டியது. திக்வெல்ல ஆட்டமிழக்காது 73 ஓட்டங்களைப் பெற்று களத்தில் உள்ளார்.

பந்து வீச்சில் டிம் சவ்தி 5 விக்கெட்டுகளையும் நெய்ல் வேக்னர் 2 விக்கெட்டுகளையும் க்ரேன்ட்ஹோம் மற்றும் போல்ட் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

முதலாவது இன்னிங்ஸ்
இலங்கை 275/9 (87)

அஞ்சலோ மெத்திவ்ஸ் 83 (153)
திமுத் கருணாரத்ன 79 (144)
நிரோஷன் திக்வெல்ல 73 (91)

டிம் சவ்தி 5/67 (25)
நெய்ல் வேக்னர் 2/75 (20)
க்ரேன்ட்ஹோம் 1/35 (13)
ட்ரெண்ட் போல்ட் 1/77 (26)

Sat, 12/15/2018 - 11:58


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை