என்ரபிறைஸ் சிறிலங்கா; 180 மில்லியன் பெறுமதியான கடன்களை வழங்கியுள்ளது

இலங்கைவங்கியின் “துறுணு திரிய” கடன் திட்டத்தின் கீழ் இதுவரை427 வரையான இளம் தொழில் முனைவோரிற்கிடையே ரூபா 18 கோடி 38 இலட்சத்து ஐநூறு (ரூபா183,800,500) பெறுமதியான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. நேற்று(26) இலங்கை வங்கியினால் வெளியிடப்பட்ட இலங்கை வங்கியின் “துறுணு திரிய” கடன் திட்ட நடைமுறைப்படுத்தல் தொடார்பான வாராந்த முன்னேற்ற மீளாய்வு அறிக்கையிலேயே இத்தரவுகள் வெளியிடப்பட்டிருந்தன.

 “துறுணு திரிய” கடன் திட்டத்தின் கீழ் 25மாவட்டங்களிலும் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதோடு மாகாண ரீதியான கடன் வழங்கலில் மேற்கு, சப்ரகமுவ மாகாணங்கள் தலா 80 வரையான கடன்களை வழங்கி தொடார்ந்தும் முன்னிலை வகிக்கும் அதேவேளை மாவட்டாரீதியிலான கடன் வழங்கலில் இரத்தினபுரி மாவட்டம் தலா 63 வரையான கடன்களை வழங்கி இதுவரை முன்னிலை வகிக்கின்றமையை இத்தரவுகள் வெளிப்படுத்துகின்றன.

“துறுணு திரிய” கடன் திட்டமானது இலங்கையின் எந்தப்பாகத்திலுமுள்ள அழகுக்கலை, ஆடைக் கைத்தொழில், கணனி, கையடக்கத்தொலைபேசி திருத்துதல் மற்றும் இது போன்று வெவ்வேறு வணிகத்தில் ஈடுபட்டு வரும் இளம் தொழில்முனைவோரிற்காக இந்தவிசேட கடன் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்தவட்டிவீதத்துடன் கடன்களைப் பெற்றுக்கொள்வதற்கும், அதைப் பயன்படுத்தி வணிகத்தினை நடாத்திச் செல்லும்போது எதிர்கொள்ளும் நிதிப்பிரச்சினைகளை எதிர்கொள்ளவும், எதிர்காலத்தில் தமது வணிகத்தினை அபிவிருத்திசெய்து கொள்வதற்கும் இது சிறந்த ஒரு வாய்ப்பினை வழங்குகின்றது.

இலங்கை வங்கியானது பிரதம அமைச்சர் அலுவலகத்தின் கொள்கை அபிவிருத்தி அலுவலகம்(PDO), மத்திய நிகழ்ச்சி முகாமைத்துவ பிரிவு(CPMU), சிறுதொழில் அபிவிருத்திப் பிரிவு(SEDD)  என்பவற்றுடன் இணைந்து இளம் தொழில் முனைவோரிற்கு நிதிஉதவியினை வழங்குவதற்காக “துறுணு திரிய” கடன் திட்டத்தினை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இலங்கை வங்கியின் “துறுணு திரிய”கடன் திட்டத்தின் கீழ்,3 வருடங்கள் வியாபாரத்தில் ஈடுபட்டுவருகின்ற பட்டதாரிகள் அல்லது ஏற்றுக்கொள்ளத்தக்க தொழில்சார் தகைமைகளைக் கொண்ட 40 வயதிற்குட்பட்ட தொழில் முனைவோரிற்கு பிணைகளற்ற அல்லது இலகுபடுத்தப்பட்ட பிணைகளின் கீழ் கடன்கள் வழங்கப்படுகின்றன. 

இக்கடன் திட்டம் தொடர்பான மேலதிக தகவல்களை இலங்கை வங்கியின் அனைத்துக் கிளைகள் மற்றும் அனைத்துப் பிரதேச செயலகங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும்.

 

Thu, 12/27/2018 - 17:19


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை