15 பந்துகளில் இலங்கை அணியின் இன்னிங்ஸை நிறைவு செய்த போல்ட்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நிறைவில் தமது இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடி வரும் நியுசிலாந்து அணி நேற்றைய இரண்டாம் நாள் நிறைவின் போது 2 விக்கெட் இழப்பிற்கு 231 ஓட்டங்களைப் பெற்றது.

முன்னதாக 88 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலை யில் தமது இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை அணி வெறுமனே 104 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளை இழந்தது.

குறிப்பாக இலங்கை அணியின் இறுதி 6 விக்கெட்டுகளையும் ட்ரெண்ட் போல்ட் 15 பந்துகளில் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி சார்பில் அஞ்சலோ மெத்திவ்ஸ் மாத்திரம் இறுதி வரை ஆட்டமிழக்காது களத்திலிருந்த போதிலும் மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட இலங்கையின் முதலாவது இன்னிங்ஸ் நிறைவுக்கு வந்தது. மெத்திவ்ஸ் ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பந்து வீச்சில் போல்ட் 6 விக்கெட்டுகளையும் சவ்தி 3 விக்கெட்டுகளையும் க்ரேண்ட்ஹோம் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த நியூசிலாந்து அணி ஜீட் ராவல் மற்றும் டொம் லதமின் சிறப்பான இணைப்பாட்டம் மூலம் வலுவான ஆரம்பத்தைப் பெற்றது. சிறப்பாக ஆடிய ராவல் 74 ஓட்டங்களுடன் அதன் பின்னர் லதம் உடன் சேர்ந்து சிறப்பாக ஆடிய அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 48 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். அதனைத்தொடர்ந்து களம் கண்ட ரோஸ் டெய்லர் சிறப்பாக ஆட இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது நியூசிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 231 ஓட்டங்களைப் பெற்று 305 ஓட்டங்களால் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

டொம் லதம் 74 ஓட்டங்களுடனும் ரோஸ் டெய்லர் 25 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

பந்து வீச்சில் தில்ருவன் பெரேரா மற்றும் லஹிரு குமார தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இன்று போட்டியின் மூன்றாவது நாளாகும்.

நியூசிலாந்து

(முதலாவது இன்னிங்ஸ்) 178

டிம் சவ்தி 68(65)

பி ஜே வட்லிங் 46(90)

சுரங்க லக்மால் 5/54 (19)

லஹிரு குமார 3/49 (14)

தில்ருவன் பெரேரா 1/13 (5)

இலங்கை

(முதலாவது இன்னிங்ஸ்) 105 (41)

அஞ்சலோ மெத்திவ்ஸ் 33(88)*

ரொஷேன் சில்வா 21(63)

ட்ரெண்ட் போல்ட் 6/30 (15)

டிம் சவ்தி 3/35 (15)

க்ரேன்ட்ஹோம் 1/19 (6)

நியூசிலாந்து

(இரண்டாவது இன்னிங்ஸ்) 231/2

டொம் லதம் 74(213)*

ஜீட் ராவல் 74(162)

Fri, 12/28/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை