தேசிய உதைபந்தாட்ட அணி: திருமலை மாவட்டத்தில் இருந்து 100 வீரர்கள் தெரிவு

அகில இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளத்தின் 23 வயதுப் பிரிவுக்கான தேசிய உதைபந்தாட்ட அணியில் விளையாடுவதற்கு வீரர்களை இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 100 வீரர்களும் 25 பயிற்சியாளர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கிண்ணியா, மூதூர் மற்றும் தம்பலகாமம் போன்ற பிரதேசங்களில் இருந்து நேர்முகப் பரீட்சைக்கு கலந்து கொண்டவர்களாகும்.

கிண்ணியா உதைபந்தாட்டச் சம்மேமேளனத்தினால் விடுக்கப்ட்ட கோரிக்கைக்கு அமைய, அகில இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வாவின் பணிப்புரையின் கீழ், திருகோணமலை மாவட்டத்துக்கான தேர்முகத் தேர்வும் பயிற்சி முகாமும் கடந்த 17, 18 மற்றும் 19 ஆகிய தினங்களில் கிண்ணியா எழிரங்கு மைதானத்தில் நடைபெற்றன.

இலங்கை உதைபந்தாட்ட தேசிய அணியின் பிரதம பயிற்றுவிப்பாளர் நிஸாம் பக்கீர் அலியினால் இவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன.

வரலாற்றில் முதல் தடவையாக இந்த நிகழ்வு கிண்ணியாவில் நடைபெற்றிருப்பது, தேசிய ரீதியில் எமக்கு கிடைத்த அங்கிகாரமாகும். கிண்ணியா உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் செயற்பாடுகளில் முழமையான திருப்தி கண்டதன் காரணமாக அகில இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் இதற்காக கிண்ணியாவைத் தெரிவு செய்திருக்கிறார். அதற்காக அவருக்கு எங்களது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு, எதிர்காலத்தில் தேசிய ரீதியிலான உதைபந்தாட்ட வளர்ச்சிக்கு எங்களால் முடியுமான அனைத்து பங்களிப்பினையும் செய்வோம் என கிண்ணியா உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் செயலாளர் எம்.சி.எம்.றிஸ்வி தெரிவித்தார்.

கிண்ணியா மத்திய நிருபர் 

 

Tue, 12/25/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை